கிளைவாய்க்கால்களை தூர்வார வேண்டும்-விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

கிளைவாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2023-07-14 19:29 GMT

லால்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்ரமணியன் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் விக்னேஷ், அருள்ஜோதி, வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கடைமடை பாசன விவசாயிகள் சங்க தலைவர் செல்வராஜ், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன சங்க தலைவர் விஸ்வநாதன், கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வக்கீல் அங்கமுத்து, பாரதிய கிசான் சங்க மாநில செய்தி தொடர்பாளர் வீரசேகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பிரதிநிதி பாலமுருகன், கரும்பு விவசாயிகள் சங்க பிரதிநிதி மணிகண்டன் மற்றும் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் ஆண்டு முழுவதும் செயல்படும் வகையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். லால்குடியில் உள்ள அனைத்து கிளை வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அப்போது விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உரிய முறையில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்