ஓடம்போக்கி ஆறு-கிளை வாய்க்கால்களை தூர்வார வேண்டும்
ஓடம்போக்கி ஆறு-கிளை வாய்க்கால்களை தூர்வார வேண்டும்
வருகிற 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவதை முன்னிட்டு ஓடம்போக்கி ஆறு மற்றும் கிளை வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
ரூ.12.89 கோடி நிதி ஒதுக்கீடு
வருகிற 12-ந்தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்தநிலையில் டெல்டா மாவட்டங்களில் ஆறு, வாய்க்கால்களை தூர் வாரும் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் ஆயிரம் கி.மீ. தூரத்தில் 111 பணிகளுக்கு ரூ.12.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதிக்கு முன்பாகவே திறக்கப்பட்டு 1.49 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நடைபெற்றது. இந்த ஆண்டும் ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர்வள ஆதாரத்துறை சார்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தூர்வார வேண்டும்
தூர்வாரும் பணிகளுக்கான டெல்டா மாவட்டங்களுக்கு மொத்தமாக ஒதுக்கி உள்ள ரூ.52 கோடியே 32 லட்சம் போதுமான நிதி அல்ல. எனவே கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். ஓடம்போக்கி, வெட்டாறு உள்ளிட்ட ஆறுகளிலும் மணல் திட்டு மற்றும் கோரை புற்கள், நாணல் செடிகள் மண்டி கிடக்கிறது. எனவே உடனடியாக ஓடம்போக்கி, வெட்டாறுகளையும், கிளை வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும். அதேபோல் ஏ, பி, சி என்கின்ற தலைப்பில் உள்ள 3 வகையான வாய்க்கால்களையும் தூர்வாரினால் மட்டுமே விளை நிலங்களுக்கு தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்த முடியும்.
சிறப்பு தூர்வாரும் நிதியை ஒதுக்க வேண்டும்
எனவே கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு கடைமடைக்கு தண்ணீர் செல்கின்றனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக சிறப்பு தூர்வாரும் நிதியை ஒதுக்க வேண்டும். விதை, உரம் உள்ளிட்ட அனைத்தும் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ள