கர்ப்பிணி கையை பிடித்து இழுத்து கொலை மிரட்டல்
கர்ப்பிணி கையை பிடித்து இழுத்து கொலை மிரட்டல்
மேலகிருஷ்ணன்புதூர்:
நாகர்கோவில் அருகே என்.ஜி.ஓ. காலனியை அடுத்த பரப்பு விளையை சேர்ந்தவர் ராஜன் (வயது 38), தச்சு தொழிலாளி. அதே பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். அந்த பெண் தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவர் சம்பவத்தன்று பகல் வீட்டில் தனியாக இருந்த போது, ராஜன் அத்துமீறி நுழைந்து, நிறைமாத கர்ப்பிணியின் கையை பிடித்து இழுத்து, தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில், ராஜன் மீது 4 பிரிவுகளில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷாஜெபகர் வழக்கு பதிவு செய்து ராஜனை கைது செய்தார். அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.