டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் வட்டார அளவிலான கலைத்திருவிழா

பள்ளிக்கல்வித்துறை சார்பில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் வட்டார அளவிலான கலைத்திருவிழா நடைபெற்றது.

Update: 2022-12-01 18:45 GMT

திருச்செந்தூர்:

பள்ளி கல்வித்துறை சார்பில் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் வட்டார அளவிலான  கலைத்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இத்திருவிழாவில் கவின்கலை, இசை, நடனம், நாடகம், மொழித்திறன் ஆகிய பிரிவுகளின் கீழ் 194 போட்டிகள் நடக்கிறது. இதில் பள்ளியளவில் ஏற்கனவே நடந்த கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படிக்கும் 1,025 அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். இதன் தொடக்க விழாவிற்கு ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் நாராயணராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் முன்னிலை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் பாஸ்கரன் வரவேற்று பேசினார். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரியசெசிலி வாழ்த்தி பேசினார். திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். ஆசிரியர் பயிற்றுனர் நபில் புகாரி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வளமை மேற்பார்வையாளர் சுப்புலெட்சுமி நன்றி கூறினார்.

விழாவில், வட்டார அளவிலான கலைத்திருவிழா குழு உறுப்பினர்களான நடுநாலுமுலைக்கிணறு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மணிசேகரன், நா.முத்தையாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியசீலி, கீழ் நாலுமூலைகிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திராணி, ஓடக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் புனிதா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார கல்வி அலுவலர் இம்மானுவேல், ஒருங்கிணைப்பாளர் இந்துநிஷா, ஆசிரியர் பயிற்றுநர்கள் ராணிபுஷ்பம், ஜெயஹெலன், ஜெயலெட்சுமி, மேடையாண்டி, ஜெகதீஸ்பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்