டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில்முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-05-03 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் முன்னாள் சந்திப்பு மற்றும் சங்க உறுப்பினர்கள் தேர்வு நடந்தது. கல்லூரி முதல்வர் சாம்ராஜ் வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் நாராயணராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

முன்னாள் மாணவர் சங்க தலைவராக ராஜாசிங் ரோக்லாண்ட், செயலாளராக தனலட்சுமி மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் வரும் ஆண்டிற்கான செயல் அறிக்கையை சமர்ப்பித்தனர். இறுதி ஆண்டில் பயிலும் பி.பி.எஸ்., பி.பி.எட்., எம்.பி.எட். மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி தங்களை முன்னாள் மாணவர்கள் சங்க உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர்.

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் கடைசி சனிக்கிழமை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும், கல்லூரி நிறுவனர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் என்றும், கல்வி, விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் சங்க தலைவர் தெரிவித்தார். முன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். சங்க செயலாளரும், துணை பேராசிரியையுமான தனலட்சுமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்