டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா

ஆலங்குளத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-09-24 18:45 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளத்தில் நகர காங்கிரஸ் சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஆலங்குளம் காமராஜர் சிலை அருகே, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு முன்னாள் எம்.பி. ராமசுப்பு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ஆலங்குளம் நகர தலைவர் தாமஸ், காங்கிரஸ் மாநில வழக்கறிஞர்கள் பிரிவு துணைத்தலைவர் பால்ராஜ், வட்டார பொறுப்பாளர் ரூபன் தேவதாஸ், நகர துணைத்தலைவர் லெனின், இளைஞர் காங்கிரஸ் நகர தலைவர் அரவிந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்