டாக்டர் ராமதாஸ் 'தமிழைதேடி' பரப்புரை பயணம்: பா.ம.க.வினர் துண்டு பிரசுரங்கள் வழங்கி ஆதரவு
டாக்டர் ராமதாஸ் ‘தமிழைதேடி’ பரப்புரை பயணம் மேற்கொள்கிறார். பா.ம.க.வினர் துண்டு பிரசுரங்கள் வழங்கி ஆதரவு வழங்கினர்.
தமிழகத்தில் அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க கோரி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 'தமிழை தேடி' என்ற தலைப்பில் சென்னையில் இருந்து செங்கல்பட்டு, கடலூர், திண்டுக்கல், திருச்சி, மயிலாடுதுறை வழியாக மதுரைக்கு வருகிற பிப்ரவரி 21-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 8 நாட்கள் பரப்புரை பயணம் மேற்கொள்கிறார்.
இந்த பரப்புரை பயணத்திற்கு பொதுமக்களிடம் ஆதரவு திரட்டும் வகையில் மாமல்லபுரத்தில் பா.ம.க. முன்னாள் துணை பொதுச்செயலாளர் திருக்கச்சூர் கி.ஆறுமுகம் தலைமையில், செங்கல்பட்டு மத்திய மாவட்ட பா.ம.க. செயலாளர் காயார் லோ.ஏழுமலை, ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்ட அமைப்பு தலைவர் பூந்தண்டலம் பி.வி.கே. வாசு, மாவட்ட அமைப்பு செயலாளர் நெம்மேலி என்.எஸ்.ஏகாம்பரம், மாமல்லபுரம் நகர செயலாளர் ரா.ராஜசேகர் உள்ளிட்ட பா.ம.க.வினர் மாமல்லபுரம் கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாக சென்று பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், வணிகர்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.