தாஜ்மகாலை கடந்து பல்லவ பூமியை உலகம் அங்கீகரித்திருப்பது பெருமை -டாக்டர் ராமதாஸ் பெருமிதம்

தாஜ்மகாலை கடந்து பல்லவ பூமியை உலகம் அங்கீகரித்திருப்பது பெருமை -டாக்டர் ராமதாஸ் பெருமிதம்.

Update: 2022-09-30 19:13 GMT

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

2021-2022-ம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் விரும்பி பார்க்கப்பட்ட தொல்லியல் சின்னங்களில் தாஜ்மகாலை பின்னுக்குத்தள்ளி மாமல்லபுரம் சிற்பங்கள் முதல் இடத்தை பிடித்துள்ளன. இது பல்லவ வம்சத்தினரும், ஒட்டுமொத்த தமிழர்களும் பெருமை கொள்ளவேண்டிய சாதனையாகும்.

இந்தியா வந்த வெளிநாட்டு பயணிகளில் 45.5 சதவீதத்தினர் மாமல்லபுரத்தை பார்வையிட்டு உள்ளனர். தாஜ்மகாலை பார்த்தவர்கள் 12.21 சதவீதத்தினர். செஞ்சிக்கோட்டை இந்த பட்டியலில் 5-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் வெளிநாட்டவரால் அதிகம் பார்க்கப்பட்ட 10 இடங்களில் 5 தமிழகத்தில் உள்ளன. தாஜ்மகாலை கடந்து பல்லவ பூமியின் அடையாளங்களை உலகம் அங்கீகரிக்க தொடங்கியிருப்பது நமக்கு பெருமை.

மாமல்லபுரத்தின் சிறப்புகளை உலகம் அறிந்து கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்ட சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுகள். மாமல்லபுரத்தில் சுற்றுலா கட்டமைப்புகளை மேலும் மேம்படுத்த வேண்டும். தமிழகத்தின் தொல்லியல் சிறப்பிடங்களை இணைக்கும் வகையிலான தொல்லியல் சுற்றுலா திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்