டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் படத்துக்கு மாலை அணிவிப்பு

தூத்துக்குடியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழாவையொட்டி, அவரது உருவப்படத்துக்கு கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2022-09-24 18:45 GMT

தூத்துக்குடியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழாவையொட்டி, அவரது உருவப்படத்துக்கு கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கனிமொழி எம்.பி.- அமைச்சர் கீதாஜீவன்

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட் அருகில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு கனிமொழி எம்.பி., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன், மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகராட்சி மண்டல தலைவர்கள் நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரி தங்கம், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரேவதி, மாநகர இளைஞரணி செயலாளர் ஆனந்த் கேப்ரியல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தட்சணமாற நாடார் சங்கம்

தட்சணமாற நாடார் சங்க முன்னாள் நிர்வாகிகள் சார்பில் ஜெயக்கொடி, கே.ஏ.பி.சீனிவாசன், எம்.பி.தமிழ்செல்வன் ஆகியோரும், நாடார் மகமை சார்பில் தலைவர் சீனிவாசன், செயலாளர் சந்திரசேகர், உதவி தலைவர் தேன்ராஜ் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

த.மா.கா. மாவட்ட தலைவர் கதிர்வேல், மதசார்பற்ற ஜனதாதள மாநில துணை தலைவர் வக்கீல் சொக்கலிங்கம், மாநகர செயலாளர் கோமதிநாயகம், முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி, வக்கீல் சங்க தலைவர் செங்குட்டுவன், வக்கீல்கள் சரவணபெருமாள், குரு,

நாடார் மகாஜன சங்க மாவட்ட பொறுப்பாளர் சதீஷ், நாடார் முன்னேற்ற பேரவை செல்வகுமார், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தூத்துக்குடி ஒன்றிய தலைவர் ரவி, ஆல் இந்தியா சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் தமிழரசன், தொழிலதிபர்கள் பொன் குமரன், மரகதராஜ் பாண்டியன், ராஜாசிங் உள்ளிட்டவர்களும் மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்