திருச்சி-புதுக்கோட்டை சாலையில் முறிந்து விழுந்த மின்கம்பங்கள்

பலத்த காற்று வீசியதால் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் 5 மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.

Update: 2022-08-10 20:13 GMT

பலத்த காற்று வீசியதால் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் 5 மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.

மின்கம்பங்கள்

திருச்சி-புதுக்கோட்டை சாலையில் கொட்டப்பட்டு பகுதியில் சாலையின் நடுவே உள்ள (சென்டர்மீடியன்) சிமெண்டு தடுப்புகட்டையில் இரவுநேர வெளிச்சத்துக்காக உயரமான மின் விளக்கு கம்பங்கள் பொருத்தப்பட்டு இருந்தன. இந்தநிலையில் நேற்று மாலை பலத்த காற்று வீசியதால் அங்கு பொருத்தப்பட்டு இருந்த 5 மின்கம்பங்கள் அடுத்தடுத்து முறிந்து சாலையில் விழுந்தன.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் அங்கு சென்று முறிந்து விழுந்த விளக்கு கம்பங்களை அப்புறப்படுத்தினார்கள். மேலும், அந்த வழியாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு மற்றொரு பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவுநேரத்தில் பலத்த மழை பெய்தபோது, தலைமை தபால்நிலையம் அருகே பாரதிதாசன் சாலையில் மைய தடுப்புகட்டையில் பொருத்தப்பட்டு இருந்த 2 மின் விளக்கு கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.

ஆய்வு செய்ய கோரிக்கை

தற்போது மீண்டும் அதேபோன்று சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த இரு சம்பவங்களிலும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆகவே அசம்பாவித சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக இதுபோன்று சாலையின் நடுவே பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகம்பங்களை ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்