"உன் தந்தையை நம்பாதே" தற்கொலைக்கு முன் ஆடியோவில் மகனுக்கு வேண்டுகோள் விடுத்த பெண்

தற்கொலைக்கு முன்பாக, தன் மகனுக்கு அனுப்பிய ெபண் அனுப்பிய உருக்கமான ஆடியோ வைரலாகி வருகிறது.

Update: 2022-12-28 18:45 GMT

தற்கொலைக்கு முன்பாக, தன் மகனுக்கு அனுப்பிய ெபண் அனுப்பிய உருக்கமான ஆடியோ வைரலாகி வருகிறது.

பெண் தற்கொலை

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை அருகே கருதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்(வயது 48). அவருடைய மனைவி மகேசுவரி (40). இவர்களுக்கு ஹரிஷ்(15), பிரதீஸ் (9) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் சென்னையில் படித்து வருகின்றனர். மகேசுவரி தனது இரு மகன்களுடன் சென்னையில் வசித்து வந்தார். பாண்டியன் கருதுபட்டியில் சொந்தமாக மினரல் வாட்டர் கம்பெனி நடத்தி வந்தார். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு கணவர் வீட்டிற்கு மகேசுவரி வந்துள்ளார். அவர் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்ததும் சிவகங்கை மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சிபிசாய் சவுந்தர்யன், தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மகேசுவரி பிணத்தை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆடியோ வைரல்

இந்தநிலையில் மகேசுவரி தற்ெகாலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது மூத்த மகனுக்கு வாட்ஸ்-அப்பில் ஆடியோ ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த ஆடியோவில் "தம்பியை பத்திரமாக பார்த்துக்கொள், நன்றாக படி, என்னுடைய இறப்பிற்கு காரணம் உன்னுடைய அப்பா தான், அவரை நம்பாதே.. என அழுது கொண்டே என்னை மன்னித்துக் கொள்" என்று பேசி உள்ளார். இந்த ஆடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து மகேசுவரியின் அண்ணன் பாலசந்திரன் கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்