எப்படி அரசியல் செய்ய வேண்டும் என ஸ்டாலின் பாடம் எடுக்க வேண்டாம் - அண்ணாமலை

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் எப்படி அரசியல் செய்யவேண்டும் என்று எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

Update: 2023-06-18 10:24 GMT

 

தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை பேசியதாவது:- பாஜகவை திமுக எப்போதோ எதிரியாக ஏற்றுக்கொண்டுள்ளது. பலப்பரீட்சை வைக்கலாம். சண்டை போடலாம். வரும் 2024-ம் ஆண்டு தேர்தல் களத்தில் சந்திப்போம். பாஜக தொண்டன் தயாராக இருக்கின்றார். தயவு செய்து முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் பாஜக கட்சியின் தொண்டர்களுக்கு, தலைவர்களுக்கு எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்று பாடம் எடுக்க வேண்டாம். தயவு செய்து எடுக்காதீர்கள்..

ஒன்றாக சேர்ந்துவிட்டால் மோடியினால் ஆட்சி செய்ய முடியாது என நினைக்கிறார்கள்... எங்களுக்கு நீங்கள் ஒன்றாக வர வேண்டும் என்று தான் ஆசை.. அப்போது தான் மொத்தமாக காலி பண்ணிவிட முடியும். தனித்தனியாக முடிப்பதை விட மொத்தமாக செய்துவிட முடியும்.. மொத்தமாக 2024 தேர்தலில் எதிர்க்கட்சிகளின் அரசியல் வாழ்க்கையை மோடி ஜி அவர்கள் முடித்துவிடுவார்கள்.. தமிழத்தில் 4- ல் இருக்கிறோம்.. 150 ஆக மாறும். இவ்வாறு அவர் பேசினார்

Tags:    

மேலும் செய்திகள்