"அண்ணாவை பற்றி விமர்சனம் செய்யக்கூடாது" - அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை
அண்ணாவை பற்றி விமர்சனம் செய்யக்கூடாது என்று அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா மேம்பாலத்தின் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஆகிய ஈபிஎஸ் தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
""அண்ணாமலை, தான் பெயரிலேயே அண்ணாவை வைத்துக் கொண்டு, அண்ணாவை விமர்சனம் செய்யக்கூடாது; ஏற்கனவே அம்மாவை பற்றி பேசி வாங்கி கட்டிக் கொண்டார், இப்போதும் பேசி வாங்கி கட்டிக் கொள்கிறார். அவரை முன்னிலைப்படுத்த எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளட்டும். எதற்கு அண்ணாவை சிறுமைப்படுத்தி பேச வேண்டும்" என்று கூறினார்.