எண்ணூரில் 'வேண்டாம் போதை' விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை வடகிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ‘வேண்டாம் போதை’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி எண்ணூரில் நடைபெற்றது.

Update: 2023-07-31 13:00 GMT

மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆர்.டி.மதன்குமார் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் டாக்டர் கலாநிதி வீராசாமி எம்.பி., திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர், மேற்கு பகுதி தி.மு.க. செயலாளர் அருள்தாசன், திரைப்பட நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், கருண்ராமன், டாக்டர்கள் பாலசுப்பிரமணியன், செல்வராஜ்குமார், கவுன்சிலர்கள் கே.பி.சொக்கலிங்கம், சிவகுமார் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், மான் கொம்பு, கத்தி சண்டை மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் இளைஞர்களுக்கு போதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து மாணவ, மாணவிகள் போதை பொருளை பயன்படுத்த வேண்டாம் என கூறி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்