தொண்டி பேரூராட்சி கூட்டம்

தொண்டி பேரூராட்சியின் சாதாரண கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-01-27 18:38 GMT

தொண்டி, 

தொண்டி பேரூராட்சியின் சாதாரண கூட்டம் பேரூராட்சி கூட்ட அரங்கில் தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் அழகு ராணி ராஜேந்திரன், செயல் அலுவலர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தொண்டி பேரூராட்சி கடற்கரை சாலையில் உள்ள ஜட்டி பாலம் பழுதடைந்த நிலையில் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் பயன்படுத்துவதற்கு மராமத்து பணி மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது., தொண்டி பேரூராட்சி பகுதிகளில் புதிதாக வீடுகள் கட்டி வரும் பொதுமக்கள் கட்டிடம் கட்டுவதற்கு முன்பே அனுமதி வாங்க வேண்டும் என்றும் அனுமதி பெறாமல் வீடுகள் கட்டுபவர்களுக்கு கட்டிட அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசின் உரிய நடைமுறையின் படி தகுந்த நடவடிக்கை எடுப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்