தாயில்பட்டி,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 2-வது கட்ட அகழாய்வில் ஏராளமான மண்பாண்ட ஓடுகள் கிடைத்தன. இதன் மூலம் மண்பாண்ட தொழிற்சாலைகள் இப்பகுதியில் இயங்கி இருக்கலாம் எனவும் வீட்டு உபயோகத்திற்கு மண்ணால் செய்யப்பட்ட பொருட்களை அதிக அளவு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிவப்பு, கருப்பு நிறத்திலான மண்பாண்ட ஓடுகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட பானை ஓடுகள், மேலும் சேதமடைந்த மண்பாண்ட பொருட்கள் தனித்தனியே வைக்கப்பட்டுள்ளன. பானை ஓடுகளில் வரையப்பட்ட கோடுகளை வைத்து எந்த ஆண்டில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆவணப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.