கோரிக்கை அட்டை அணிந்து டாக்டர்கள் பணியாற்றினர்
கும்பகோணத்தில் கோரிக்கை அட்டை அணிந்து டாக்டர்கள் பணியாற்றினர்
கும்பகோணம்;
கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், அனைத்து அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் டாக்டர்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.அரசாணை 354-ஐ உடனே மறு ஆய்வு செய்ய வேண்டும். அரசாணை 293-ஐ திருத்தம் செய்து ஊதியஉயர்வு வழங்க வேண்டும். உயிரிழந்த டாக்டர்கள் குடும்பத்துக்கு மருத்துவ நல நிதியை உடனே வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலைய பணி நேரத்தை மாற்றிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவதாக அனைத்து அரசு டாக்டர் சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் ராஜேஷ், தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அகிலன், ஆனந்த் ஆகியோர் தெரிவித்தனர்.