அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொடக்கூடாது
ழைக்காலத்தில் அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொடக்கூடாது என மின்வாரிய உதவி செயற்பெறியாளர் ரவிக்குமார் அறிவுறுத்தி உள்ளார்.
வேதாரண்யம்:
மழைக்காலத்தில் அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொடக்கூடாது என மின்வாரிய உதவி செயற்பெறியாளர் ரவிக்குமார் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மின்கம்பிகளை தொடக்கூடாது
வேதாரண்யம் பகுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது மழை காலங்களில் மின் கம்பியின் அருகில் செல்லகூடாது. வேதாரண்யம் பகுதியில் பூலோக ரீதியாக அதிக மழையோடு, காற்று ம் வீசும். இப்பகுதியில் பனை மற்றும் தென்னைமரங்கள் அதிக அளவில் உள்ளதால் காற்றினால் மட்டைகள் விழுந்து மின்கம்பி அறுந்து விழும் வாயப்பு உள்ளது. அவ்வாறு. அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொடக்கூடாது.
இதுகுறித்து உடனடியாக மின் வாரியத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல் வேதாரண்யத்தில் சவுக்கு மரங்களும் அதிகம் உள்ளது. சவுக்கு மரங்கள் காற்றினால் மின்பாதையில் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்படலாம்.சவுக்கு மரங்களை அகற்றுவதற்கு மின்வாரிய பணியாளர்களுக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மின்சாதனங்கள்
மின் கம்பத்தில் கொடி கயிறு காட்டக்கூடாது. மின் இழுவை கம்பியில் ஆடு, மாடுகளை கட்டி வைக்க கூடாது. மின்கம்பங்களில் கேபிள் மற்றும் இதர வயர்கள் கட்டக் கூடாது. வீடுகளில் ஈர கைகளால் மின்சாதனங்களை இயக்க கூடாது. கணினி மற்றும் தொலைக்காட்சி பெட்டி போன்ற மின் சாதனங்களை இடி, மின்னலின் போது பயன்படுத்த கூடாது.மழை நேரங்களில் குழந்தைகளை மின்கம்பம் அருகில் தெருவில் விளையாட அனுமதிக்க கூடாது. இறுதி ஊர்வலத்தில் மாலைகளை மின்கம்பிகள் மீது வீசுவதை தவிர்க்க வேண்டும்.இதனால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.