ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனங்களை இயக்கக்கூடாது

ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனங்களை இயக்கக்கூடாது என்று மாணவர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவுரை வழங்கினார்.

Update: 2022-06-10 16:17 GMT

பொள்ளாச்சி, 

ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனங்களை இயக்கக்கூடாது என்று மாணவர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவுரை வழங்கினார்.

விழிப்புணர்வு முகாம்

பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. முகாமுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமை தாங்கி ஓட்டுநர் உரிமம் பெற செயல்முறை விளக்கம் அளித்தார். தொடர்ந்து அவர் பேசும்போது கூறியதாவது:-

மாணவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன், ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டக் கூடாது. அதிவேகமாக வாகனங்களை ஓட்டாமல், அரசு நிர்ணயம் செய்த வேகத்தில் மட்டும் வாகனத்தை இயக்க வேண்டும். சாலையில் முன்னால் செல்லும் வாகனத்தை முந்தி செல்வதில் வேகம் காட்டக்கூடாது.

கடைபிடிக்க வேண்டும்

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். சாலை விபத்துகளை தடுக்க பாதுகாப்பு விதிமுறைகளை மாணவர்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். அதிவேகமாக சென்று விபத்தில் சிக்கிக் கொள்ளக்கூடாது. சாலையில் வேகத்தடைகள் இருப்பதை கவனித்து வாகனங்களை இயக்க வேண்டும். இருசக்கர வாகனத்தில் 2 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும்.

எல்.எல்.ஆர்.முகவரி மாற்றம், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் ஆகியவற்றை எம்பரிவாகன் எனற செயலி மூலம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். முடிவில் மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்