வெளிமாநில நிலக்கடலை விதைகளை வாங்கி பயன்படுத்தக்கூடாது

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெளிமாநில நிலக்கடலை விதைகளை வாங்கி பயன்படுத்தக்கூடாது என விதை ஆய்வு துணை இயக்குனர் தெரிவித்தார்.

Update: 2022-11-23 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெளிமாநில நிலக்கடலை விதைகளை வாங்கி பயன்படுத்தக்கூடாது என விதை ஆய்வு துணை இயக்குனர் தெரிவித்தார்.

நாகை- மயிலாடுதுறை மாவட்டங்களின் விதை ஆய்வு துணை இயக்குனர் தேவேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரசீது பெற்று பயன்படுத்த வேண்டும்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கார்த்திகை பருவத்தில் நிலக்கடலை சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்படும். விவசாயிகள் தங்களுக்கு தேவையான உயர்விளைச்சல் ரகங்கள் விதைகளை உரிமம் பெற்ற அரசு மற்றும் அரசு சார்பு தனியார் விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே ரசீது பெற்று வாங்கி பயன்படுத்த வேண்டும். மேலும் விதைகளை வாங்கும்போது அதற்கான விற்பனை பட்டியலில் விதையின் பெயர், ரகம், குவியல் எண், காலாவதி நாள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் குறிப்பிட்டிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.விதை ரகத்தின் பெயர் இல்லாமலும், விற்பனை பட்டியல் உரிய படிவத்தில் இல்லாமலும் வாங்கப்படும் விதைகளால் பின்னாளில் கள பிரச்சினை ஏற்பட்டால், விவசாயிகள் உரிய இழப்பீடு கோர இயலாத நிலை ஏற்படும்.

வெளிமாநில நிலக்கடலை விதைகள்

எனவே இதனை தவிர்க்க நிலக்கடலை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டும் விதைகள் வாங்கி உபயோகிக்க வேண்டும். உரிமம் பெறாத ஏஜெண்ட்டுகள், எண்ணை ஆலைகள் மற்றும் வெளி மாநில நிலக்கடலை விதைகளை வாங்கி பயன்படுத்தக்கூடாது.விவசாயிகள் தாங்கள் வாங்கி விதைத்த விதைகள் தரமற்றதாகவோ, முளைப்புத்திறனில் குறைபாடு மற்றும் விதை வணிக உரிமம் பெறாத ஏஜெண்ட்டுகள் மற்றும் எண்ணை ஆலைகளில் விதை நிலக்கடலை விற்பது தொடர்பான புகார் ஏதேனும் பெறப்பட்டால் உடனடியாக, விதை ஆய்வு துணை இயக்குனர் 7708106521, மயிலாடுதுறை விதை ஆய்வாளர் 6369813460 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்