நிலங்களில் விவசாயக்கழிவுகளுக்கு தீ வைக்க வேண்டாம்

நிலங்களில் விவசாயக்கழிவுகளுக்கு தீ வைக்க வேண்டாம் என அதிகாரி கேட்டுக்கொண்டார்.

Update: 2023-03-27 19:30 GMT

தாயில்பட்டி, 

ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் அய்யனார் கோவில் அருகே மக்காச்சோள தோட்டத்தில் கழிவுகளில் தீப்பிடித்து எரிவதால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் பட்டாசு ஆலைகள் பாதிக்க வாய்ப்பு உள்ளதாக அக்கம் பக்கத்தினர் வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தூர் பாண்டி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயைஅணைத்தனர். அப்போது தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தூர் பாண்டி கூறுகையில், தற்போது கோடை காலமாக இருப்பதால் விவசாயக்கழிவுகளை தீவைத்துக் கொழுத்தாதீர்கள். தீ வைப்பதால் தீ வேகமாக பரவக் கூடும். விவசாய நிலங்களில் இருக்கும் விவசாயிகளுக்கு நன்மை செய்யும் பூச்சிகள், புழுக்கள், முழுமையாக அழிந்து விடும். மேலும் விவசாயக் கழிவுகளை தீவைப்பதால் அருகில் உள்ள விவசாய நிலங்களும் சேதமடைவதுடன், வேறு பொருட்கள் தீக்கிரையாக வாய்ப்புள்ளது. இதனால் பெரும் சேதம் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதால் விவசாயக் கழிவுகளை முடிந்த வரையில் விவசாய நிலங்களில் இருந்து அப்புறப்படுத்துங்கள். மாறாக தீ வைக்க வேண்டாம் என விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார். 

Tags:    

மேலும் செய்திகள்