டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் மனு

டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் மனு கொடுத்தனர்.

Update: 2023-07-06 18:12 GMT

புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் 13 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனையும், 2 பேரிடம் குரல் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில் முதற்கட்டமாக நடந்த டி.என்.ஏ. பரிசோதனையின் போது வேங்கைவயலை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 8 பேர் வர மறுப்பு தெரிவித்தனர். மேலும் மதுரை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

டி.என்.ஏ. பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேரிடமும் பரிசோதனை நடத்த அனுமதி கோரி புதுக்கோட்டை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் கோர்ட்டு 8 பேரையும் டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ள உத்தரவிட்டதோடு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி சேகரிப்பு நடத்தவும் அறிவுறுத்தியது.

இந்நிலையில் 18 வயது சிறுவர்கள் 4 பேரிடம், டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி கேட்டு புதுக்கோட்டை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்