டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை
தூத்துக்குடி டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அரசு பொதுத் தேர்வில் சாதனை படைத்தனர்.
தூத்துக்குடி டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீதம் தேர்ச்சி ஆகும். 10-ம் வகுப்பு தேர்வில் மாணவி செல்வ தர்ஷனா 492 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கூடத்தில் முதல் இடத்தையும், 479 மதிப்பெண்கள் பெற்ற ஹரீஷ் மாணிக்கம் 2-வது இடத்தையும், 477 மதிப்பெண்கள் பெற்ற அபிராமி 3-வது இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன், பள்ளி தாளாளர் மற்றும் செயலாளர் உமரிசங்கர், சங்க செயலாளர் ராஜகுமார், பொருளாளர் செல்வராஜ், துணைத்தலைவர் அனிதா ஆர்.சிவானந்தம், துணை செயலாளர் வி.பி.ராமநாதன், பள்ளி கமிட்டி உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், ராமசுப்பு, ஜனகர், ரமேஷ், ராகவன், லிங்கசெல்வன், டி.ஜெயகணேஷ், ஜெயபாலன் ஆகியோர் பாராட்டினர்.
மேலும் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான அ.பிரம்மசக்தி, மாணவி செல்வ தர்ஷனாவுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.