ஊட்டியில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
ஊட்டியில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
ஊட்டி
மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவத்தை கண்டித்தும், இந்த கொடுஞ்செயலுக்கு முழு பொறுப்பேற்று மணிப்பூர் அரசு பதவி விலக வலியுறுத்தியும் ஊட்டியில் ஏ.டி.சி. பகுதியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் அப்துல் சமது தலைமை தாங்கினார். இதில் ஊட்டியில் உள்ள அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், விடுதலை சிறுத்தை கட்சியினர், கிறிஸ்தவ சங்கத்தினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.