தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
வாய்மேடு:
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ராம் ஏற்பாட்டில் நடந்த இந்த முகாமை மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன் தொடங்கி வைத்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆசைத்தம்பி, துணை அமைப்பாளர்கள் வைரவநாதன், ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் துரைராசு, ஒன்றிய துணைச் செயலாளர்கள் அருளரசு, ராஜேந்திரன், வக்கீல் அணி துணை அமைப்பாளர் அன்பரசு, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் கருணாநிதி, மாவட்ட பிரதிநிதி வீரமணிகண்டன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பாலு, ஒன்றிய குழு உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பாலசுப்பிரமணியன், கைலாசம், முன்னாள் மாவட்ட பிரதிநிதி அழகிரி பாலன் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.