பொற்கிழி பெற்ற தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பாராட்டு
பொற்கிழி பெற்ற தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு செங்கோட்டையில் பாராட்டு விழா நடந்தது.
செங்கோட்டை:
தென்காசியில் சமீபத்தில் நடந்த தி.மு.க. நிகழ்ச்சியில் செங்கோட்டை பகுதியை சேர்ந்த மூத்த முன்னோடிகள் 37 பேருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி வழங்கினார். அவர்களுக்கு செங்கோட்டை நகர தி.மு.க. அலுவலகத்தில் பாராட்டு விழா நடந்தது.
விழாவில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கியதற்காக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாத்தூர் ராமச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து நகர செயலாளர் வழக்கறிஞர் வெங்கடேசன் பேசினார். மேலும் வரும் டிசம்பர் மாதம் சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணி 2-வது மாநில மாநாட்டில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்து பேசினார்.
நிகழ்ச்சியில் நகர நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் உட்பட பலா் கலந்துகொண்டனர்.