மணிப்பூர் கலவரத்தை கண்டித்து சேலத்தில் தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து சேலத்தில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் அருகில் பெரியார் சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளர் மஞ்சுளா தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரம்யா முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., டி.எம்.செல்வகணபதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கண்டன கோஷங்கள்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மணிப்பூர் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
திடீரென மழை பெய்ய தொடங்கியது. அப்படி இருந்தும் மழையை பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
ஆத்தூர்
சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில் ஆத்தூர் பழைய பஸ் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில மகளிர் அணி துணை அமைப்பாளர் ரேகா பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் பத்மினி பிரியதர்ஷினி, வீரபாண்டி மலர்விழி ராஜா. வீரபாண்டி ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர், காசி அம்மாள், ஆத்தூர் நகரசபை தலைவர் நிர்மலா பபிதா, கவுன்சிலர் ஜீவா, ஆத்தூர் நகர செயலாளர் பாலசுப்பிரமணியம், நகர செயலாளர் வேல்முருகன், ஒன்றிய செயலாளர்கள் செழியன், விஜயகுமார், நரசிங்கபுரம் நகரசபை தலைவர் அலெக்சாண்டர், தலைவாசல் ஒன்றிய செயலாளர் மணி, அழகுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.