தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்
நெல்லையில் தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. 12-வது வார்டு சார்பில் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கொடியேற்று விழா, பொதுக்கூட்டம் ஆகியவை நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் நடந்தது. தச்சநல்லூர் பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் கோகிலவாணி சுரேஷ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தையல் எந்திரம், இஸ்திரி பெட்டி, வேட்டி-சேலை, பாத்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார்.
கூட்டத்தில் மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மண்டல தலைவர்கள் ரேவதி பிரபு, மகேஸ்வரி, முன்னாள் எம்.பி.க்கள் விஜிலா சத்யானந்த், வசந்தி முருகேசன், துணைச்செயலாளர் மூளிகுளம் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.