வேப்பூர் அருகே ரெயில் மோதி தி.மு.க. பிரமுகர் பலி

வேப்பூர் அருகே ரெயில் மோதி தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-11-01 18:45 GMT


வேப்பூர், 

தி.மு.க. பிரமுகர்

வேப்பூர் அடுத்த நல்லூர் அருகே உள்ள இலங்கியனூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியன் (வயது 70). தி.மு.க. கிளை செயலாளரான இவர் நேற்று மதியம் அங்குள்ள விருத்தாசலம்-சேலம் ரெயில்வே தண்டவாளம் பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் தண்டவாளம் அருகே நடந்து சென்றபோது, அந்த வழியாக சேலத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த ரெயில் கலியன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ரெயில்வே போலீசார் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கலியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்