விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறி விட்டது

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறி விட்டது என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

Update: 2022-12-21 19:41 GMT

சிவகாசி, 

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறி விட்டது என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்து சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 3 இடங்களில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருத்தங்கல் கிழக்கு மண்டலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மேற்கு மண்டலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பகுதி செயலாளர் சரவணக்குமார் தலைமை தாங்கினார். விஸ்வநத்தம் கிராமத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியம் தலைமை தாங்கினார்.

3 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

தமிழகத்தில் நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டது. பால்விலை, மின்சார கட்டணம், வீட்டு வரி, குடிநீர்வரி உயர்வால் அப்பாவி மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகி உள்ளனர்.

தவறி விட்டது

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறி விட்டது. பல்வேறு காரணங்களை கூறி அம்மா உணவகங்களை பல இடங்களில் தி.மு.க. அரசு மூடி வருகிறது. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், மாநில நிர்வாகி வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், ஒன்றிய செயலாளர்கள் கருப்பசாமி, வெங்கடேசன், பகுதி கழக செயலாளர்கள் தொகுதி கருப்பசாமிபாண்டியன், சாம், ஒன்றிய கவுன்சிலர் சுடர்வள்ளி சசிக்குமார், டாக்டர் விஜய்ஆனந்த், இளநீர் செல்வம், கண்ணன், சிக்மா கருப்பசாமி, ரமேஷ், அனுப்பன்குளம் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்