தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்
கோவில்பட்டியில் தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நகர தி.மு.க. இளைஞரணி செயலாளர் கா.மகேந்திரன் ஏற்பாட்டில் கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு மற்றும் புதுக்கிராமத்தில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. நகர தி.மு.க. செயலாளரும், நகரசபை தலைவருமான கா.கருணாநிதி தலைமை தாங்கினார். இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பா.முகேஷ், சரவணகுமார், சமுத்திர பாண்டியன், அன்புநிதி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் குடியாத்தம் குமரன், சரவெடி சரத் பாலா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எம்.மதியழகன், மாவட்ட துணை செயலாளர் ஏஞ்சலா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் இரா.மணி, நகர அவை தலைவர் முனியசாமி, பொருளாளர் ராமமூர்த்தி, துணை செயலாளர் காளியப்பன், மாவட்ட பிரதிநிதி ரவீந்திரன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சேதுரத்தினம், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தாமோதர கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கயத்தாறு தாலுகா முடுக்கலாங்குளம் கிராமத்தில் தி.மு.க. கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் இரண்டாம் ஆண்டு திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.
கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன பாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, கிளைச் செயலாளர் கருத்தப்பாண்டி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சின்ன கருப்புசாமி, செல்வராஜ், வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன் வரவேற்பு பேசினார்.
கொள்கை பரப்பு துணை செயலாளர் குமரன், தலைமை கழக சிறப்பு பேச்சாளர் சரவெடி சரத் பாலா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் ஆ.சி.பா.ராஜதுரை ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.