தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்

நெல்லை மேலப்பாளையத்தில் தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

Update: 2023-10-07 19:21 GMT

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி ரோடு மற்றும் சந்தை முக்கு பகுதியில் தெருமுனை பிரசார கூட்டங்கள் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமை தாங்கினார். மாநில மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் விஜிலா சத்யானந்த், மாநகர தி.மு.க. செயலாளர் சு.சுப்பிரமணியன், மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில தலைமை கழக பேச்சாளர்கள் தமிழ் பிரியன், நெல்லை ரவி ஆகியோர் பேசினார்கள். கூட்டத்தில் மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மாநகராட்சி கவுன்சிலர் பவுல்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நெல்லை மண்டல சட்டத்துறை ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த வக்கீல்கள் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் தலைமை தாங்கினார். நெல்லை மாநகர செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, சட்டத்துறை இணை செயலாளர்கள் ரவிசந்திரன், பச்சையப்பன், சந்துரு உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நாம் அதிக ஓட்டுகள் பெற வேண்டும். வக்கீல்கள் தங்களை தேர்தல் பணிக்கு தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மத்திய மாவட்ட அமைப்பாளர் காமினிதேவன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்