தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம்
சங்கராபுரம் ஒன்றிய, நகர இளைஞர் அணி சாா்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம்
சங்கராபுரம்
சங்கராபுரம் ஒன்றிய, நகர தி.மு.க. இளைஞர் அணி சார்பில் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் சங்கராபுரம், ஆரூர், குளத்தூர் கிராமங்களில் நடைபெற்றது. மாவட்ட ஆவின் தலைவரும், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளருமான ஆறுமுகம், நகர செயலாளர் துரை தாகப்பிள்ளை ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட துணை செயலாளர் பாப்பாத்திநடராஜன், ஒன்றியக்குழு தலைவர் திலகவதிநாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர் அய்யம்மாள்ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி முனுசாமி, நகர இளைஞர் அணி செயலாளர் ஹரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், வடக்கு மாவட்ட செயலாளருமான உதயசூரியன், தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக் ஆகியோர் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனைகள் குறித்து பேசினர். இதில் நிர்வாகிகள் கமருதின், அண்ணாமலை, கதிரவன், பொன்னி, விஜயா, செல்வம், அன்பழகன், ரவி, செங்குட்டுவன், தயாளன், முருகன், கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.