தி.மு.க. கவுன்சிலரை கண்டித்து தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

தி.மு.க. கவுன்சிலரை கண்டித்து தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2023-03-27 21:07 GMT


மதுரை மாநகராட்சி 41-வது வார்டுக்கு உட்பட்ட ஐராவதநல்லூர் பகுதியை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் செந்தாமரைக் கண்ணன் கடந்த 21-ந் தேதி முதல்-அமைச்சர் மதுரைக்கு வந்தபோது விரகனூர் ரிங் ரோட்டில் தூய்மை பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை தனது வார்டில் பணி செய்யாமல் எதற்கு இங்கு வந்து பணி செய்கிறீர்கள் என கேட்டு திட்டியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தி.மு.க. கவுன்சிலர் செயலை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மதுரை சிலைமான் போலீஸ் நிலையத்தில் தூய்மை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தி.மு.க. கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 41-வது வார்டு அலுவலகம் முன்பாக தூய்மை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தூய்மை பணியாளர்கள் சங்க நிர்வாகி அம்சராஜன் மற்றும் பலர் பங்கேற்றனர். இதற்கிைடயே சிலைமான் போலீசார் விசாரணை நடத்தி அரசு பணிகளை செய்ய விடாமல் தடுத்ததாக தி.மு.க. கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்