திமுக ஆட்சி பெண்களுக்கான ஆட்சி - அமைச்சர் அன்பில் மகேஷ்
பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் முன்னேற்றத்திற்கான பல்வேறு திட்டங்களை உருவாக்கி கொண்டிருப்பவர் தமிழக முதல் அமைச்சர்.
திருச்சி,
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள துவரங்குறிச்சியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,
'இந்த ஆட்சி என்பது பெண்களுக்கான ஆட்சி தான். தொடர்ந்து பெண்கள் முன்னேற்றம், மாணவர்கள் முன்னேற்றம் விவசாயிகளுக்கு தோழனாக இருக்கக்கூடிய பல திட்டங்களை உருவாக்கி கொண்டிருப்பவர் நமது முதல் அமைச்சர் என்றார்.
அவர் மேலும் கூறுகையில், இந்தியாவிலேயே விவசாயத்துக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது திமுக ஆட்சிதான் என்பதை நாம் பெருமையாக கருதவேண்டும்' என்று பேசினார்.