தி.மு.க. இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம்

தி.மு.க. இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார். கனிமொழி வகித்து வந்த மாநில மகளிர் அணி செயலாளர் பதவி ஹெலன் டேவிட்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-24 00:03 GMT

சென்னை,

தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டு உள்ளார். துணை செயலாளர்களாக எஸ்.ஜோயல், ரகுபதி, இளையராஜா, அப்துல்மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், கு.பி.ராஜா, ஆனந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

மாநில மகளிர் அணி தலைவராக விஜயா தாயன்பன், மகளிர் அணி மாநில செயலாளராக ஹெலன் டேவிட்சன், இணை செயலாளர் குமரி விஜயகுமார், துணை செயலாளர்கள் பவானி ராஜேந்திரன், தொண்டர் அணி செயலாளர் நாமக்கல் ப.ராணி.

சமூக வலைதளம்

தொண்டர் அணி இணை செயலாளர் தமிழரசி ரவிக்குமார், துணை செயலாளர்கள் சத்யா பழனிகுமார், ரேகா பிரியதர்ஷினி, விஜிலா சத்யானந்த், மாலதி நாகராஜ், பிரசார குழு செயலாளர்கள் சேலம் சுஜாதா, கே.ராணி ரவிச்சந்திரன், அமலு, மாலதி நாராயணசாமி, தேன்மொழி, உமா மகேஷ்வரி, ஜெசி பொன்ராணி.

சமூக வலைதள பொறுப்பாளர்கள் டாக்டர் யாழினி, ரத்னா லோகேஸ்வரன், அ.ரியா, ஆலோசனைக்குழு பொறுப்பாளர்கள் காஞ்சனா கமலநாதன், சங்கரி நாராயணன், காரல் மார்க்ஸ், சிம்லா முத்துசோழன், சித்ரமுகிரி சத்தியவாணி முத்து, வாசுகி ரமணன், காயத்ரி சீனிவாசன், மலர் மரகதம் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கனிமொழி வகித்த பதவி

தி.மு.க. மகளிர் அணி செயலாளராக கனிமொழி எம்.பி. இருந்து வந்தார்.

அவர் தற்போது தி.மு.க. துணை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதால், அவர் வகித்த மாநில மகளிர் அணி செயலாளர் பதவி ஹெலன் டேவிட்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்