தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

விளாத்திகுளம்அருகே தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2023-05-18 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய தி.மு.க இளைஞரணி சார்பாக பேரிலோவன்பட்டி மற்றும் வேலிடுபட்டி கிராமத்தில் தமிழகஅரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அரசின் சாதனைகள் குறித்து பேசினார். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் பசும்பொன் ரவிச்சந்திரன், சரவெடி சரத் பாலா, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ,் பேரூர் செயலாளர் வேலுச்சாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பாலமுருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள், பல்வேறு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்