தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி

தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-05-03 19:56 GMT

ராதாபுரம் கிழக்கு ஒன்றியத்தில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதில் மொத்தம் 10 ஆயிரம் உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் பெறப்பட்டன. இதையடுத்து உறுப்பினர்கள் படிவங்கள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதனை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், தொகுதி பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மாநில வர்த்தக அணி துணை செயலாளர் தாமரை பாரதியிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் நாகமணி மார்த்தாண்டம், அமைச்சியார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்