தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி

திருக்கடையூரில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது

Update: 2023-04-09 18:45 GMT

திருக்கடையூர்:

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மத்திய ஒன்றிய தி.மு.க சார்பில் காலமநல்லூர், டி. மணல்மேடு ஊராட்சியில் உள்ளவர்களுக்கு தி.மு.க. உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி திருக்கடையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் அமுர்த விஜயகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய பிரதிநிதி மதியழகன் வரவேற்றார். மாவட்ட பிரதிநிதி சிவகுமார், கிளை செயலாளர்கள் கலைச்செல்வன், சுப்ரமணியன், ரகு ,ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை சொல்லி தி.மு.க. கழகத்தில் உறுப்பினராக சேர்ப்பதற்கு உறுப்பினர்களுக்கு விண்ணப்பம் வழங்கினர். இதில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செந்தில், உறுப்பினர் சேர்க்கும் பொறுப்பாளர் மாரியப்பன் மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்