தி.மு.க. சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா
சோளிங்கர் அருகே தி.மு.க. சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சமத்துவபுரத்தில் சோளிங்கர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சோளிங்கர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன் தலைமை தாங்கி, பெரியாரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.
நிகழ்ச்சியில் சோளிங்கர் ஒன்றியக்குழு துணைத் தலைவர் பூங்கொடி ஆனந்தன், மாவட்ட பிரதிநிதி சக்கரவர்த்தி, பொருளாளர் பழனி, துணை செயலாளர்கள் சிவாஜி, குமுதா தண்டபாணி மற்றும் தி.மு.க. மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.