தியாகி விசுவநாததாஸ் படத்துக்கு தி.மு.க.வினர் மரியாதை

பாளையங்கோட்டையில் தியாகி விசுவநாததாஸ் படத்துக்கு தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.

Update: 2022-06-16 19:08 GMT

தியாகி விசுவநாததாஸ் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாளையங்கோட்டை தெற்கு பஜார் லூர்துநாதன் சிலை அருகில் அலங்கரிக்கப்பட்ட தியாகி விசுவநாததாஸ் உருவப்படத்துக்கு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

தியாகி விசுவநாததாஸ் தேசிய பேரவை தலைவர் சுரேஷ் முத்துராஜ், செயலாளர் சிதம்பரம், வக்கீல் செல்வ சூடாமணி, தி.மு.க. அவைத்தலைவர் வேலு என்ற சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்