இந்தி திணிப்பை எதிர்த்து தி.மு.க. இளைஞரணி- மாணவரணியினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, புதுக்கோட்டையில் இந்தி திணிப்பை எதிர்த்து தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-10-15 18:45 GMT

தூத்துக்குடி, புதுக்கோட்டையில் இந்தி திணிப்பை எதிர்த்து தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்தும், பொது நுழைவுத்தேர்வு திட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடியில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் அறிவுறுத்தலின்படி நேற்று சிதம்பரநகர் பஸ்நிறுத்தம் அருகே வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மாணவர் அணி அமைப்பாளர் ஜான் அலெக்ஸாண்டர் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் இந்தி திணிப்பை எதிர்த்தும், பொது நுழைவுத் தேர்வு திட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் இளைஞர் அணி, மாணவர் அணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி ஈசி பிட்னெஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழக அளவில் முதல்முறையாக தூத்துக்குடியில் வித்தியாசமான முறையில் 62 வயது முதியவரான ஓட்டப்பந்தய வீரர் இம்மானுவேலுடன் மாணவர்களான ஜெஸ்வின், கிருஷ், மாதேஷ் ஆகிய 3 சிறுவர்கள் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் குரங்கு (மங்கி) மாதிரியாக ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி 3-ம் மைலில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு குரங்கு ஓட்டம் டீச்சர்ஸ் காலனி சந்திப்பில் முடிவடைந்தது. எபன் பள்ளி தாளாளர் ஜாய்பெல் பிராங்க், எஸ்.ஏ.வி பள்ளி தாளாளர் பாலாஜி, ஜேஸ்பர், பிரபாகர், சிலம்ப பயிற்சியாளர் ராஜலிங்கம், கராத்தே பயிற்சியாளர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டை

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி நேற்று புதுக்கோட்டையில் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாணவரணி அமைப்பாளர் அருண்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரி சங்கர், சண்முகையா எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் அருணாச்சலம், துணைச் செயலாளர்கள் ஜெயக்குமார் ரூபன், ஆறுமுக பெருமாள், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார், ஆவின் சேர்மன் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்