தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நெல்லையில் தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

Update: 2022-12-27 20:50 GMT

பேட்டை:

தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பு கூட்டுறவு பேரங்காடி முன்பு தி.மு.க. கொடியேற்று விழா, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இளைஞரணி ஆறுமுக ராஜா தலைமை தாங்கினார். கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நெல்லை மத்திய மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அப்துல் வகாப் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு, மரக்கன்றுகளையும், ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி- சேலைகளையும் வழங்கினார். மேலும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் எஸ்.வி.சுரேஷ், தொ.மு.ச. தலைவர் அய்யப்பன், வட்ட செயலாளர் சின்னதுரை மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்