தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
கந்திலியில் தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
கந்திலி தெற்கு ஒன்றியம், கந்திலி ஊராட்சியில் தண்ணீர் தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்புவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் க.தேவராஜி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர், தர்பூசணி, ஜூஸ் வழங்கினார்.
தொடர்ந்து அச்சமங்கலம் ஊராட்சியில் கிளைக்கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.டி. அசோக் குமார் தலைமை வகித்து, வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் க.தேவராஜி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு, கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா, வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சா.ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் ஆ.சம்பத்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சி.சத்தியமூர்த்தி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன், மாவட்ட தொண்டரணி து.அமைப்பாளர் எஸ்.ராஜா, ஊராட்சிமன்ற தலைவர் பிரபு, பார்த்திபன், பிரபாகரன், சம்பூர்ணம் மற்றும் தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.