தி.மு.க. எம்.பி. ஆ.ராசா மீது பா.ஜ.க.வினர் போலீசில் புகார்
தி.மு.க. எம்.பி. ஆ.ராசா மீது பா.ஜ.க.வினர் போலீசில் புகார் செய்தனர்.
புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்திற்கு பா.ஜனதா மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்தனர். மேலும் நகர தலைவர் காடுவெட்டி குமார் பெயாில் ஒரு புகார் மனுவை இன்ஸ்பெக்டர் குருநாதனிடம் அளித்தனர். அந்த மனுவில், தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா எம்.பி. இந்துக்கள் பற்றி தொடர்ந்து அவதூறாக பேசி வருவதாகவும், சாதி பற்றி பேசி பிரச்சினையை தூண்டும் வகையில் பேசி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குறிப்பிட்டிருந்தனர்.