தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்

ராதாபுரம் அருகே உதயத்தூர் ஊராட்சி பகுதியில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

Update: 2023-04-09 18:38 GMT

வள்ளியூர் (தெற்கு):

ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் உதயத்தூர் ஊராட்சி பகுதியில் "உடன்பிறப்புகளாய் இணைவோம்" தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. முகாமை, மேற்கு ஒன்றிய செயலாளர் மி.ஜோசப் பெல்சி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் ராமையா, ஊராட்சி மன்ற தலைவர் உதயத்தூர் கந்தசாமி மணிகண்டன், உதயத்தூர் ஒன்றிய குழு உறுப்பினர் படையப்பா முருகன், கிளைச் செயலாளர் முருகன், இளைஞரணி சரேந்தர், பிரசாந்த், வி.என்.குளம் நிஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்