தி.மு.க. அரசின் சாதனை விளக்க கூட்டம்
தி.மு.க. அரசின் சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது.
சிவகாசி,
சிவகாசி மாநகர தி.மு.க.வின் 5-வது பகுதி கழகம் சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட அவைத்தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கினார். வெயில்ராஜ், சேவுகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர வர்த்தக அணி அமைப்பாளர் இன்பம் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் கொடி சந்திரசேகர் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாநகர செயலாளர் உதயசூரியன், மாநகராட்சி துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், மாநகர துணை செயலாளர் கவுன்சிலர் பாக்கியலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் எபனேசர் நன்றி கூறினார். பொதுக்கூட்ட ஏற்பாடுகளை 5-வது பகுதி கழக செயலாளர் காளிராஜன் செய்திருந்தார். இதே போல் திருத்தங்கலிலும் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாநகர செயலாளர் உதயசூரியன், தலைமை கழக பேச்சாளர் தனசெல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் மாவட்ட பிரதிநிதி ராஜேஷ் நன்றி கூறினார். சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட விஸ்வநத்தம் பகுதியில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்துக்கு மாநில நிர்வாகி வனராஜா தலைமை தாங்கினார். யூனியன் தலைவர் முத்துலட்சுமி விவேகன்ராஜ் முன்னிலை வகித்தார். மாணவரணி மஞ்சுநாத் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக தலைமை கழக பேச்சாளர் குபேந்திரன் கலந்து கொண்டு 2 ஆண்டு சாதனைகளை பற்றி பேசினார். இதில் ஒன்றிய நிர்வாகிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.