தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
சிவகாசி,
சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவகாசி மாநகரம், சிவகாசி ஒன்றியங்களில் உள்ள தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் தனித்தனியாக நடைபெற்றது. சிவகாசியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமை தாங்கினார். இதில் பகுதி செயலாளர்கள் சபையர் ஞானசேகரன், அ.செல்வம், காளிராஜன், மாரீஸ்வரன், மண்டல தலைவர் குருசாமி, திருத்தங்கல் நகர்மன்ற முன்னாள் துணைத்தலைவர் பொன்சக்திவேல், மாநகர பொருளாளர் சீனிவாச பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ஒன்றிய பகுதியில் உள்ள வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் சாட்சியாபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் விவேகன்ராஜ் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் டேலண்ட் அன்பரசு, தனலட்சுமி கண்ணன், கவிதா பிரவீன், சின்னதம்பி, கணேசன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ஆலாவூரணி வெங்கடேசன் மற்றும் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள தி.மு.க.வினருக்கு அதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.