செங்கோட்டையில் தி.மு.க. கூட்டம்
செங்கோட்டையில் நகர தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை நகர தி.மு.க. செயற்குழு கூட்டம் நகர செயலாளா் அலுவலகத்தில் நடந்தது. நகர செயலாளா் ஆ.வெங்கடேசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், அடுத்த மாதம் தென்காசி மாவட்டத்தில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிட வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆலோசனையின் பேரில் சிறப்பான வரவேற்பு வழங்கிடும் வகையில் செங்கோட்டை நகர நுழைவாயிலில் இருக்கும் குண்டாறு ஆற்றுப்பாலம் முதல் நித்தியகல்யாணி அம்மன் கோவில் ஆற்றுப்பாலம் வரை சாலையின் இருபுறத்திலும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் லிங்கராஜ், நகர அவைத்தலைவர் காளி, நகர துணை செயலாளர்கள் ஜோதிமணி, முத்துசரோஜா, ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.