சிவகாசி
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 1-வது பகுதி கழக தி.மு.க. சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி வனராஜா, அதிவீரன்பட்டி செல்வம், முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் பொன் சக்திவேல், மாநகர பொருளாளர் சீனிவாசபெருமாள், ரவி செல்வம், தினேஷ்மாறன், மண்டல தலைவர் குருசாமி, மாவட்ட பிரதிநிதி ராஜேஷ், மாநகராட்சி கவுன்சிலர்கள் பாக்கியலட்சுமி, சேதுராமன், காளிராஜன், சிவனேசன், திருப்பதி, மாரீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுமக்கள் நலன் கருதி கட்சி நிகழ்ச்சிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை 1-வது பகுதி கழக செயலாளர் செல்வம் செய்திருந்தார்.